மத்திய அமைச்சரவை

மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் 01.01.2019-லிருந்து நிலுவையில் உள்ள அகவிலைப்படியின் கூடுதல் தவணையை விடுவிக்க அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 19 FEB 2019 9:22PM by PIB Chennai

விலைவாசி உயர்வை ஈடு கட்டும் வகையில் அடிப்படை ஊதியம் / ஓய்வூதியத்தில் தற்போது உள்ள ஒன்பது சதவீதத்திற்கும் கூடுதலாக மூன்று சதவீதம் அதிகரித்து மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி நிவாரணம்  ஆகியவற்றின் கூடுதல் தவணைத் தொகையை 01.01.2019-லிருந்து விடுவிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 7-வது மத்திய ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்கப்பட்ட கணக்கீட்டு முறைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு ஆண்டுக்கு மொத்தம் ரூ.9,168.12 கோடி அரசுக்கு செலவு ஏற்படும்.  2019 -20 நிதியாண்டுக்கு  (2019 ஜனவரி முதல் 2020 பிப்ரவரி வரையிலான 14 மாதங்களுக்கு) ரூ.10,696.14 கோடி செலவாகும்.   இதன் மூலம் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62.03 லட்சம் ஓய்வதியதாரர்களும் பயனடைவார்கள்.

-----



(Release ID: 1565502) Visitor Counter : 114