மத்திய அமைச்சரவை
அகமதாபாத் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
19 FEB 2019 9:16PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கீழ் காணும் ஆலோசனைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- அகமதாபாத் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்ட அமலாக்கம். இதன் மொத்த தூரம் 28.254 கிலோ மீட்டர். இதில் முதலாவது வழித்தடம் 22.838 கிலோ மீட்டர் தூரமுள்ள மோட்டேரா விளையாட்டரங்கத்திலிருந்து மகாத்மா மந்திர் வரை. இரண்டாவது வழித்தடம் 5.416 கிலோ மீட்டர் தூரமுள்ள ஜி என் எல் யூ முதல் ஜி ஐ எஃப் டி வரை. மொத்த செலவு ரூ.5384.17 கோடி.
- இந்தத் திட்டத்திற்கான நிறுவன ஏற்பாடு மற்றும் சட்டரீதியான கட்டமைப்பு
- திட்ட அனுமதிக்கான நிபந்தனைகள்
பயன்கள்:
இந்தத் திட்டத்தை அமலாக்குவதன் மூலம் மிகவும் தேவைப்படுகின்ற, அகமதாபாதிலிருந்து காந்தி நகர் வரையிலான கூடுதல் பொது போக்குவரத்துக் கட்டமைப்பு வசதி கிடைக்கும்.
---------
(வெளியீட்டு அடையாள எண்: 1565433)
வருகையாளர் எண்ணிக்கை : 163