மத்திய அமைச்சரவை
பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தை மார்ச், 2019-க்குப் பிறகும் தொடர அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
Posted On:
19 FEB 2019 9:04PM by PIB Chennai
பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மார்ச், 2019-க்குப் பிறகும் தொடர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
- 2022 வரை பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டுமானத்திற்கான மொத்த வீடுகளின் இலக்கு 1.95 கோடியாகும்.
- பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் 2019-20 வரையிலான இரண்டாம் கட்டத்திற்கு முதல் கட்ட விதிகளே பொருந்தும். இதன்படி அறுபது லட்சம் வீடுகள் கட்ட ரூ.76,500 கோடி செலவாகும். (மத்திய அரசின் பங்கு ரூ.48,195 கோடி, மாநில அரசின் பங்கு ரூ.28,305 கோடி)
பயன்கள்:
1.95 கோடி வீடுகள் கட்டப்படுவதன் மூலம் ஊரகப் பகுதிகளில் வீடுகள் இல்லாத / இடிபாடுள்ள வீடுகளில் வாழும் மக்களுக்கு 2022-க்குள் புதிய வீடுகள் கிடைக்கும்.
-----
(Release ID: 1565395)
Visitor Counter : 138