மத்திய அமைச்சரவை

இணைய பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் மொராக்கோ இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்து மத்திய அமைச்சரவையிடம் எடுத்துரைக்கப்பட்டது

प्रविष्टि तिथि: 02 JAN 2019 6:03PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவையிடம், இணைய பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் மொராக்கோ இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 2018, செப்டம்பர், 25 அன்று  இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தானது.

     இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையானது, பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள் குறித்த அறிவு பரிமாற்றம் மற்றும் கண்டுபிடித்தல், தீர்வு காணுதல் மற்றும் தடுத்தல் ஆகியவற்றில் இந்தியா மற்றும் மொராக்கோ இடையேயான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கச் செய்ய வழிவகுக்கும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதன் மூலமாக, இணைய பாதுகாப்புத் துறையில் மொரக்காவுடனான நிறுவன மற்றும் திறன் வளர்ப்பு மூலம், இணைய பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளும் பரஸ்பரம் நன்மைகளைப் பெறும்.

***


(रिलीज़ आईडी: 1558349) आगंतुक पटल : 186
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , Assamese , Bengali , Gujarati , Telugu , Kannada