கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் ‘பரோ: தி அன்டோல்டு ஸ்டோரி ஆஃப் பிரைடு ஸ்லேவரி’ என்ற திரைப்படம் திரையிடப்படுகிறது.
இந்தப் படத்தை நடிகை, தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் திருப்தி போயர் உருவாக்கியுள்ளார். இதற்காக அவர் 4.5 ஆண்டுகள் ஆய்வு செய்துள்ளார்.
ஹரியானாவின் மேவாட் பகுதியில் பெண்களைப் பணம் கொடுத்து வாங்கி மணம் செய்விக்கும் கொடுமையை இந்தப் படம் வெளிப்படுத்துகிறது. ஒரு அரசு சாரா அமைப்பின் உதவியுடன், பத்திரிகையாளர்கள் போல வேடமிட்டு தனது தாயுடன் கிராமங்களுக்குச் சென்ற அவர், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 60 பெண்களைச் சந்தித்துள்ளார்.
11 முதல் 13 வயதுடைய சிறுமி ஒருவர் குறைந்த தொகைக்கு விற்கப்பட்ட சம்பவம் அவரை மிகவும் பாதித்துள்ளது. அந்தச் சிறுமியின் கதையை அடிப்படையாகக் கொண்டே படத்தின் கதாநாயகி பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஷெல்டர் அறக்கட்டளை சுமார் 2,000 பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களைத் தேசிய மகளிர் ஆணையத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து மத்திய அரசு உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளதாக திருப்தி போயர் தெரிவித்தார்.
பெண்கள் கடத்தல், பாலியல் வன்முறை, மணமகள் விற்பனை ஆகியவற்றுக்கு எதிராக உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இப்படத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342558®=3&lang=1
(Release ID: 2342558)
****
SK/PLM/SH