கோவாவில் நடைபெற்று வரும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI 2026), உலக சினிமா (Cinema of the World) பிரிவில் திரையிடப்படும் ஈர்த்த எ ஃப்யூ டேஸ் இன் தி சன் (A Few Days in the Sun) என்ற திரைப்படம் குறித்து அதன் இயக்குநர் மௌரோ முல்லர், எழுத்தாளர் ஜோஸ் டேவிட் ஃபிகுரோவா கார்சியா, தயாரிப்பாளர் லெஸ்லி ஹோலரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கினர்.
மெக்சிகோவின் ரிவியரா மாயா பகுதியில் நடைபெறும் கதையில், வளர்ச்சித் திட்டத்திற்காக உள்ளூர் மக்களை சட்டவிரோதமாக வெளியேற்ற முயலும் வசதியான ஐரோப்பியத் தம்பதியும், சிறுவன் ஒருவன் சிறைக்குச் செல்வதைத் தடுக்க முறைகேடாக நடந்தோ கொள்ளும் காவலருடன் ஆபத்தான ஒப்பந்தம் செய்யும் ஏழை மெக்சிகோ குடும்பமும் இடம்பெறுகின்றனர். இரு குடும்பங்களும் வன்முறை நிறைந்த கடத்தல் சம்பவத்தில் சிக்குகின்றனர்.
மெக்சிகோ, டொமினிகன் குடியரசு, ஜெர்மனி, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து ஆகிய ஐந்து நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கலாசாரங்களைப் புரிந்துகொள்வதற்கும் பிறர் மீது அக்கறையை வளர்ப்பதற்கும் பயணம் உதவும் என்று இயக்குநர் மௌரோ முல்லர் தெரிவித்தார்.
ஒரே தவறுக்கு ஏழைகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்கின்றனர். செல்வந்தர்கள் தப்பித்துவிடுகின்றனர் என்று எழுத்தாளர் கார்சியா குறிப்பிட்டார். ஊழல், சமூக ஏற்றத்தாழ்வு, அதிகார வேறுபாடு ஆகியவற்றையும் படம் எடுத்துரைப்பதாக அவர் தெரிவித்தார்.
பெண்களின் முடிவுகளும் கதையில் முக்கியப் பங்கு வகிப்பதாக தயாரிப்பாளர் லெஸ்லி ஹோலரன் கூறினார். உலகம் முழுவதும் சமத்துவம், அங்கீகாரம், பிரதிநிதித்துவம் ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும், பல்வேறு கலாசாரங்களை அறியப் பயணம் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342109®=3&lang=1
***
SK/PLM/SU