57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

யுனெஸ்கோ காந்தி விருது குறித்து நடுவர் குழு உறுப்பினர் திரு மனோஜ் கடாம் விளக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 7:50PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2342328Views: 12

கோவாவில் நடைபெற்று வரும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI), மதிப்புமிக்க ஐசிஎஃப்டி-யுனெஸ்கோ காந்தி விருதுக்காக 10 புனைகதைத் திரைப்படங்கள் போட்டியிடுகின்றன. அமைதி, சகிப்புத்தன்மை, பிறர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல், சமூக நீதி, கலாசாரங்களுக்கு இடையிலான புரிதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, காந்தி பதக்க நடுவர் குழு உறுப்பினர் திரு மனோஜ் கடாம், திரைப்பட விழாவின் படைப்பாற்றல் இயக்குநர் திரு பங்கஜ் சக்சேனா ஆகியோர் பத்திரிகைத் தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் பேசினர்.

திரைப்படங்களை மதிப்பீடு செய்யும்போது, கதையில் வெளிப்படும் மனிதநேயமே முதன்மையான அம்சமாகக் கருதப்படும் என்று திரு மனோஜ் கடாம் தெரிவித்தார். குறிப்பாக, அகிம்சை, அமைதியைப் பரப்புதல் ஆகிய காந்தியக் கொள்கைகளுடன் கதை எந்த அளவுக்கு இணைந்துள்ளது என்பது கவனிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திரைப்படத்தின் கலைநயம், தொழில்நுட்பத் தரம், இயக்குநர் தாம் சொல்ல விரும்பும் கருத்தை எந்த அளவுக்கு உண்மையுடனும் உறுதியுடனும் வெளிப்படுத்தியுள்ளார் என்பதும் மதிப்பீட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார்.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 46-வது பதிப்பில், பாரிஸ் நகரைச் சேர்ந்த சர்வதேசத் திரைப்படம், தொலைக்காட்சி, ஒலிக்காட்சி தொடர்பு கவுன்சிலுடன் இணைந்து யுனெஸ்கோ ஆதரவின் கீழ் இந்தக் காந்தி விருது நிறுவப்பட்டது. இவ்வாண்டு பரிசீலனைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 10 திரைப்படங்களில் 7 சர்வதேசத் திரைப்படங்கள், 3 இந்தியத் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342206&reg=3&lang=1

(Release ID : 2342206)

****

SK/PLM/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2342328
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026