கோவாவில் நடைபெற்ற 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமாவில் திரைப்படமல்லாத பிரிவில் “தி ஹக் ஆஃப் எம்டினஸ்” என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டு பாராட்டைப் பெற்றது. இந்நிலையில், பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில், இப்படத்தின் இயக்குநர் திரு பிரதீப் குமார் ஷெட்டி கலந்துகொண்டு ஆவணப்படம் குறித்த அனுபவத்தை எடுத்துரைத்தார். 2025-ம் ஆண்டில் கன்னட மொழியில் எடுக்கப்பட்ட இந்த படம், தனது சொத்துக்களை இழந்த பின்னர் ஒரு ஒதுக்குப்புறமான காட்டில் தஞ்சம் புகும் மனிதனின் வாழ்க்கை அனுபவங்களை விவரிக்கிறது என குறிப்பிட்டார்.
கர்நாடகாவில் உள்ள கல்லியா கூட்டுறவு வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்த தனது சொத்துக்களை மீட்க முடியாத சந்திரசேகர் என்பவரின் வாழ்க்கையை இந்த ஆவணப்படம் எடுத்துரைப்பதாகவும் இயக்குநர் பிரதீப் குமார் ஷெட்டி தெரிவித்தார். தனது சொத்துக்களை மீட்க சந்திரசேகர் நீண்ட சட்டப் போராட்டத்தில் இறங்கிய நிலையில், அங்குள்ள ஒதுக்குப்புறமான வனப்பகுதியில் தங்கி கூடைகள் பின்னி விற்பனை செய்து பிழைப்பு நடத்தியதாகவும் குறிப்பிட்டார். சந்திரசேகரின் கதையானது, நீதி, இடம்பெயர்வு, தனிமை, மீள்திறன் ஆகியவற்றை ஒன்றிணைப்பதாகவும் தெரிவித்தார்.
20 நிமிட ஆவணப் படமான “தி ஹக் ஆஃப் எம்டினஸ்”, இந்தாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 19வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் சர்வதேச விமர்சர்கள் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341919®=3&lang=1&_gl=1
****
SK/LN/SH