இந்திய சர்வதேசத் திரைப்பட விழா 2026-ன் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்ட ‘கிருஷ்ணாவதாரம்’ (பாகம் 1: தி ஹார்ட்) என்ற இந்தித் திரைப்படத்தின் இயக்குநர் திரு ஹர்திக் கஜ்ஜர், தயாரிப்பாளர் திரு சஜன் ராஜ் குருப் ஆகியோர் பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர். ராம் மோரியின் ‘சத்யபாமா’ நாவலைத் தழுவி, மூன்று பாகங்களாக உருவாகும் இத்தொடரின் முதல் பாகம், சத்யபாமாவின் பார்வையில் கிருஷ்ணரின் வாழ்க்கைப் பயணத்தையும், அன்பு, பக்தி, அதிகம் அறியப்படாத நிகழ்வுகளையும் விவரிக்கிறது.
கிருஷ்ணர் புராணங்களைக் கடந்தவர் என்றும், அவர் நம்பிக்கை, உணர்வு, நமது வரலாற்றின் உயிர்ப்புள்ள பகுதி என்றும் தயாரிப்பாளர் திரு சஜன் ராஜ் குருப் குறிப்பிட்டார். இளைய தலைமுறையினர் நமது வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில், 7.5 ஏக்கர் பிரம்மாண்ட அரங்கு, நவீன காட்சித் தொழில்நுட்பம் (விஎஃப்எக்ஸ்), பாரம்பரிய இசையுடன் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் திரு ஹர்திக் கஜ்ஜர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2341536®=3&lang=1
---
SK/SE/PS