57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

பார்வையாளர்களை சிரிக்க வைப்பது கடினமான பணி : தெலுங்கு திரைப்பட இயக்குநர் அனில் ரவிபுடி

இடுகை இடப்பட்ட நாள்: 25 NOV 2026 3:47PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2341618Views: 3

கோவாவில் நடைபெற்றுவரும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தனது 'மன சங்கர வர பிரசாத் காரு' திரைப்படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், தேசிய திரைப்பட விருது பெற்ற திரைப்பட இயக்குநர் திரு அனில் ரவிபுடி, பார்வையாளர்களை சிரிக்க வைப்பது ஒரு சவாலான படைப்புப் பயிற்சி என்று கூறினார். 164 நிமிடங்கள் ஓடும் இந்தத் தெலுங்கு மொழித் திரைப்படம், இந்திய சர்வதேச திரைப்பட விழா 2026-ன் இந்தியன் பனோரமா பிரிவின் முன்னணி திரைப்படப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து படங்களில் ஒன்றாகும். இயக்குநருடன் தயாரிப்பாளர்களான திரு சாஹு கராபதி, செல்வி கே சுஷ்மிதா, நடிகை செல்வி கேத்தரின் தெரசா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நகைச்சுவை என்பது எப்போதுமே ஒரு கடினமான அம்சம் என்று குறிப்பிட்ட திரு ரவிபுடி, குடும்ப உணர்வுகளையும் சிரஞ்சீவி போன்ற ஒரு சூப்பர் ஸ்டாருடன் தொடர்புடைய எதிர்பார்ப்புகளையும் சமநிலைப்படுத்திக்கொண்டு நகைச்சுவையை எழுதுவதில் உள்ள சவால்கள் குறித்து விளக்கினார். எந்த நகைச்சுவைகள் பார்வையாளர்களை ஈர்க்கும் என்பதைக் கணிப்பது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டார். தனது திரைக்கதை எழுத்துக் குழுவை பாராட்டிய இயக்குநர், அனைத்து வயதினரையும் கவரும் கதைகளை உருவாக்குவதே தனது முயற்சியாகும் என்று கூறினார்.

ஸ்ரீ ரவிபுடியால் எழுதப்பட்டு இயக்கப்பட்ட 'மன சங்கர வர பிரசாத் காரு' திரைப்படம், தனது தொழில் மீதான பற்று காரணமாக மனைவி, குழந்தைகளிடமிருந்து பிரிந்து வாழும் ஒரு தேசிய பாதுகாப்பு அதிகாரியின் கதையைப் பற்றியதாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341202&reg=3&lang=1&_gl=1

****

SK/IR/LDN/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2341618
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026