இந்தியத் திரையுலகில் முக்கியப் படைப்பாகக் கருதப்படும் ‘27 டவுன்’ (1974) திரைப்படத்தை இயக்கிய மறைந்த இயக்குநர் அவ்தார் கவுலின் வாழ்க்கையையும், திரையுலகப் பங்களிப்பையும், கலைப் பயணத்தையும் ஆவணப்படுத்தும் வகையில், மத்திய அரசின் வெளியீட்டுப் பிரிவு பதிப்பித்துள்ள ‘அவ்தார் கவுல்: தி (இன்)கம்ப்ளீட் ஸ்டோரி’ நூல் கோவாவில் நடைபெற்று வரும் 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் நவம்பர் 21 அன்று வெளியிடப்பட்டது. கடிதங்கள், புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட நினைவுகளைக் கொண்டு வினோத் கவுல் எழுதியுள்ள இந்நூல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நவம்பர் 23 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய நூலாசிரியர் வினோத் கவுல், மறைந்த தமது உறவினரான அவ்தார் கவுல் குறித்த தனிப்பட்ட தேடலாகத் தொடங்கிய முயற்சி, அவரது திரைப் பங்களிப்பைப் புதிய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் ஆவணமாக உருவெடுத்ததாகக் குறிப்பிட்டார். வணிகத் திரைப்படங்கள் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்திலும் கலைப்படத்தை உருவாக்கிய அவ்தார் கவுலைப் போன்று, இளம் இயக்குநர்களும் தங்களது படைப்பாற்றல் தேர்வில் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், சினிமாவிற்கும் இலக்கியத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்தும் வெளியீட்டுப் பிரிவின் முயற்சிகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340815®=3&lang=1
****
SK/SE/SH