57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

இந்தியா - ஜப்பான் இடையே படைப்புத்துறையில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஒப்பந்தம் கையெழுத்தானது

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 3:06PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2340495Views: 15

இந்தியா – ஜப்பான் இடையே படைப்புத் தொழில்நுட்பங்கள், திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அனிமேஷன், விஷூவல் எஃபெக்டஸ், கேமிங், காமிக்ஸ், எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி ஆகியவற்றிற்கான இந்தியாவின் தேசிய திறன் மேம்பாட்டு மையமான இந்திய படைப்புத் தொழில்நுட்பங்கள் நிறுவனத்திற்கும், வாகோம் இந்தியா நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்திய மாணவர்களுக்கு தொழில்ரீதியிலான உபகரணங்கள், தொழில்துறை சார்ந்த பயிற்சிக்கான அணுகலை விரிவுபடுத்துவதை இக்கூட்டாண்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அனிமேஷன் திரைப்பட வடிவமைப்பு, வீடியோகேம் வடிவமைப்பு, மேம்பாடு, தயாரிப்புக்கு பிந்தையப் பணி, விஎஃப்எக்ஸ் ஆகியவற்றில் இந்திய படைப்புத் தொழில்நுட்பங்கள் நிறுவனத்தின் இரண்டாண்டு பட்டயப் படிப்புகளில் பயிலக்கூடிய 18 மாணவர்களுக்கு 50 சதவீதம் அளவிற்கு கல்விக்கட்டணம் உறுதித் தொகை அளிக்கப்படும். அத்துடன் தகுதியுடைய வெளியூர் மாணவர்களுக்கு தங்குமிட வசதி ஏற்படுத்தித் தரப்படும்.

இரண்டு நிறுவனங்களும் இணைந்து டிஜிட்டல் சித்திரக்கலை, கருத்துக் கலை, கதாபாத்திர வடிவமைப்பு, அனிமேஷன், விளையாட்டுக்கலை ஆகியவற்றைக் கொண்ட உலகளாவிய மாணவர்களின் படைப்புக் கலையை உருவாக்கும். இது மாணவர்கள் தொழில்துறைக்கு தயாரான படைப்புத் தொகுப்புகளை உருவாக்க வகை செய்யும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340310&reg=3&lang=1

***

SS/IR/LDN/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2340495
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026