57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

சர்வதேச திரைப்பட விழாவில் வெளியீட்டுப் பிரிவு சார்பில் சிறப்பு அரங்கு : தகவல் ஒலிபரப்புத் துறைச் செயலாளர் சஞ்சல்குமார் திறந்து வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 21 NOV 2026 9:03PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2339928Views: 8

கோவாவில் நடைபெற்று வரும் 57-வது சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI 2026), மத்திய தகவல் ஒலிபரப்புத் துறைச் செயலாளர் திரு சஞ்சல் குமார், வெளியீட்டுப் பிரிவின் (Publications Division) அரங்கைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வெளியீட்டுப் பிரிவு தலைமை இயக்குநர் திருமதி கஞ்சன் பிரசாத் கலந்து கொண்டார்.

இந்தத் திரைப்பட விழா நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர்கள், திரை ஆர்வலர்கள், திரைத்துறை வல்லுநர்கள் பங்கேற்றுள்ளனர். விழாவில் 24-வது எண் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள வெளியீட்டுப் பிரிவு அரங்கில், இந்தியாவின் வரலாறு, கலை, கலாசாரம், சினிமா, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நூல்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, இந்தியத் திரைப்படங்களின் வளர்ச்சி, திரைப்பட இயக்குநர்களின் படைப்புப் பயணம், இந்திய சினிமாவுக்குப் புகழ் சேர்த்த பிரபலங்களின் பங்களிப்புகள் போன்ற அம்சங்கள் குறித்த நூல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வெளியீட்டுப் பிரிவு, 1941-ம் ஆண்டு முதல் நூல்கள், இதழ்களை வெளியிட்டு வருகிறது.

வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தல், இந்தியாவின் இலக்கியம், வரலாறு, கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், பொதுமக்களிடம் திரைப்பட அறிவை வளர்த்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. திரைப்படம், இலக்கியம் ஆகியவற்றை இணைக்கும் தளமாகவும் இது விளங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2339759&reg=48&lang=2

*******

SK/PLM/RJ


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2339928
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026