விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் பறவைக் காய்ச்சல் தடுப்புமருந்து எச்5என்1 : மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் நவம்பர் 20 அன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 18 NOV 2026 9:38AM by PIB Chennai

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் பறவைக் காய்ச்சல் தடுப்பு மருந்து எச்5என்1-ஐ மத்திய வேளாண், விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் 2026 நவம்பர் 20 அன்று போபாலில் உள்ள தேசிய உயர்பாதுகாப்பு விலங்கு நோய் தடுப்பு நிறுவனத்தில் (என்ஐஎச்எஸ்ஏடி) நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். போபாலில் உள்ள ஐசிஏஆர் – என்ஐஎச்எஸ்ஏடி-யால்   உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த தடுப்பு மருந்து எச்5என்1 எச்பிஏஐ வைரஸின் கிளேட் 2.3.2.1ஏ வகைக்கு எதிராக இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதலாவது தடுப்பு மருந்து ஆகும்.

ஹைலி பேதோஜெனிக் ஏவியன் இன்ஃப்ளுயன்சா (எச்பிஏஐ) என்பது பொதுவாக பறவைக் காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. இது கோழிப்பண்ணைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தீவிர நோயாகும்.  இந்நோய் பரவும் போது பாதிக்கப்பட்ட பறவைகளில் சுமார் 100 சதவீதம் இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பறவைகளை பெருமளவில் அழிக்க வேண்டிய நிலையாலும், வர்த்தகக் கட்டுப்பாடுகளாலும் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது. இத்தாக்கம் கோழிப்பண்ணைகளுடன் மட்டுமின்றி உலகளாவிய வர்த்தகம், கோழிகளுக்கான பொருட்களின் விலை, விவசாயிகளின் வாழ்வாதாரம் ஆகியவையும் பாதிக்கப்படும். இந்தியாவில் 2006-ம் ஆண்டு இந்நோய் கண்டறியப்பட்டதிலிருந்து இதுவரை எச்5என்1, எச்5என்8 ஆகிய வைரஸ்களால் 500-க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

பறவைக் காய்ச்சல் தீவிரமாக பரவும் போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளர்ச்சி 1.5 சதவீதம் வரை குறையக்கூடும். அத்துடன் இந்நோய் கட்டுப்பாடின்றி பரவினால் நாட்டின் ஒட்டுமொத்த கோழிகளின் எண்ணிக்கையில் 20 சதவீதத்திற்கும் மேலானவைப் பாதிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337716&reg=3&lang=1

***

SK/IR/SM/PS


(வெளியீட்டு அடையாள எண்: 2337774) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Nepali , Marathi , Bengali , Gujarati , Telugu , Kannada , Malayalam