பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி ரிபப்ளிக் உச்சி மாநாடு 2026-ல் பங்கேற்று உரையாற்றினார்

இடுகை இடப்பட்ட நாள்: 22 JUN 2026 10:05PM by PIB Chennai

ரிபப்ளிக் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற ரிபப்ளிக் உச்சி மாநாடு 2026-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், விரைவான, முக்கியத்துவம் மிக்க வளர்ச்சியை உலக நாடுகள் கண்டுவரும் இத்தருணத்தில், “பெரும் சக்திமிக்க இந்தியா; தேசம் முதலில்” என்ற கருப்பொருளில் விவாதத்தை நடத்திய ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய சாதனைகளுக்கும் அது நம்பத்தக்க உலகளாவிய சக்தியாக உருவெடுத்ததற்கும் தேசமே முதலில் என்ற கொள்கையே வழிகாட்டும் கொள்கையாக இருந்துள்ளது என்று கூறினார். இந்தியா ஒரு நீண்ட வரலாற்று நினைவையும், வளர்ச்சி, பின்தங்கிய நிலை ஆகிய இரண்டில் இருந்து கற்றுக்கொள்ளும் தனித்துவமிக்க திறனைக் கொண்ட நாகரிகம் என்று திரு மோடி தெரிவித்தார். தற்போது மேற்கொள்ளப்படும் முடிவுகளும் நடவடிக்கைகளும் எதிர்வரும் நூற்றாண்டுகளில் நாட்டின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதாக அவர் குறிப்பிட்டார். நாடு உலகில் விரைவாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக மட்டுமின்றி நம்பத்தகுந்த, உறுதியான கூட்டாளியாகவும் உருவெடுத்துள்ளது என்று கூறினார்.

இந்தியாவின் எழுச்சி என்பது நம்பிக்கை, ஸ்திரத்தன்மை, பெரும் உலக நலனுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீது அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் தாம் பங்கேற்றது குறித்து நினைவுகூர்ந்த பிரதமர், தேசம் முதன்மை என்ற கொள்கையில் இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை உலக நாடுகளின் தலைவர்கள் அங்கீகரிப்பதாக கூறினார். மேலும் வளர்ச்சிப் பாதையில் நாடு முன்னேறும்போது இந்த வழிகாட்டல் தத்துவமே அதன் கொள்கைகள், விருப்பங்கள் ஆகியவற்றை தொடர்ந்து வடிவமைத்து வருவதாக குறிப்பிட்டார்.

அரசின் 12 ஆண்டுகால ஆட்சி குறித்துப் பேசிய பிரதமர், தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, கதர் தொழில் ஊக்குவிப்பு, உள்ளூர் தயாரிப்புகளுக்கான இயக்கம் போன்ற முன்முயற்சிகள் மக்கள் நாட்டிற்கு முதலிடம் அளிக்கும் உணர்வை ஏற்றுக்கொண்டதாலேயே வெற்றிபெற்றதாக தெரிவித்தார். பழங்குடியினர், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்கள் ஆகியவற்றில் இந்த அணுகுமுறையின் மாற்றத்தக்க தாக்கத்தை எடுத்துரைத்த பிரதமர், ஒரு காலத்தில் வன்முறை, வளர்ச்சியின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் வளர்ச்சி கண்டுவருவதாக கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 12 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கும் அதிகமான சாலைகள், 9,500-க்கும் மேற்பட்ட மொபைல் கோபுரங்கள், வங்கி வசதிகள், அஞ்சல் நிலையங்கள், தகவல்தொடர்பு கட்டமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கடந்த ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கு காரணமான மாவோயிச வன்முறை, உறுதிமிக்க பாதுகாப்பு முயற்சிகள், விரைவுபடுத்தப்பட்ட வளர்ச்சி ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் தற்போது முடிவுறும் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

கடந்த காலத்தில் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அச்சத்துடனும், நிச்சயமற்றத் தன்மையுடனும் இருந்த நிலையில், அது அகன்று அவர்களுடைய இலக்குகளும் திறன்களும் வளர்ந்துவருவதற்கான சான்றாக பஸ்தர் ஒலிம்பிக் போட்டியின் சிறப்பான வெற்றி திகழ்கிறது என்று பிரதமர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276874&reg=3&lang=1

***

TV/PLM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2334370) வருகையாளர் எண்ணிக்கை : 10