உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும், அடுத்த ஆண்டிற்குள் வெளிநாட்டவர் மண்டலப் பதிவு அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும்:மத்திய அமைச்சர் திரு அமித் ஷா

இடுகை இடப்பட்ட நாள்: 02 NOV 2026 4:17PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, வெளிநாட்டவர் மண்டலப்  பதிவு அலுவலகங்களை விரிவுபடுத்துவதன் மூலம், இந்தியாவில் உள்ள வெளிநாட்டினரை நிர்வகிப்பதற்கான கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது.

சுற்றுலா, மருத்துவம், கல்வி போன்ற தேவைகளுக்காக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை கணிசமான அளவில்  அதிகரித்துள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் வெளிநாட்டவர் மண்டலப்  பதிவு அலுவலகங்களை அமைப்பது அவசியமாகிறது.

இது சேவைகள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்யவும், விதிமுறைகளுக்கு உட்பட்ட செயல்பாடுகளை மேம்படுத்தவும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இந்தியாவை முன்னிறுத்தவும் உதவிடும். இதனைக் கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, 2027-ம் ஆண்டிற்குள் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும்,வெளிநாட்டவர் மண்டலப்  பதிவு அலுவலகங்களை அமைக்க வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, 2025-ம் ஆண்டு முதல், ஐந்து மாநிலத் தலைநகரங்களில், புதிய வெளிநாட்டவர் மண்டலப்  பதிவு அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜெய்ப்பூர், சண்டிகர், கவுஹாத்தி ஆகிய இடங்களில் 2025-ம் ஆண்டில் இந்த அலுவலகங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. முன்னதாக, முறையே தில்லி, அமிர்தசரஸ், கொல்கத்தாவில் இருந்த வெளிநாட்டவர் மண்டலப் பதிவு அலுவலகங்களின் அதிகார வரம்பிற்குள் இவை செயல்பட்டு வந்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331564&reg=3&lang=1    

***

SS/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2334182) வருகையாளர் எண்ணிக்கை : 28