பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் இயக்கம் 5-ஐ டாக்டர் ஜிதேந்திர சிங் நாளை தொடங்கி வைக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 NOV 2026 3:13PM by PIB Chennai

நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் இயக்கம் 5-ஐ மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பணியாளர் நலத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதுதில்லி ரைசினா சாலையில் உள்ள தேசிய ஊடக மையத்தில் 2026 நவம்பர் 6 அன்று  முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஏற்பாடு செய்துள்ள ஒரு மாத காலம் இயக்கம் நாட்டில் 2000-க்கும் மேற்பட்ட நகரங்கள், சிறிய நகரங்ளில் 2026 நவம்பர் 30 வரை நடைபெறுகிறது. ஜீவன் பிரமான் செயலி மூலம் முக அங்கீகார அடையாள வசதியை பயன்படுத்தி ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ஆயுள் சான்றிதழ்களை எளிதாகவும், வசதியாகவும் எந்த சிக்கலுமின்றி சமர்ப்பிப்பதை உறுதி செய்வது இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.

இந்த இயக்கம் பொதுத்துறை வங்கிகள், இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி, இந்திய தனித்துவ அடையாளம் ஆணையம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்படுகிறது. அத்துடன் பாதுகாப்பு, ரயில்வே, அஞ்சல், தொலைத்தொடர்பு ஆகிய அமைச்சகங்கள், துறைகள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புகள், மாநில அரசுகள் ஆகியவையும் பங்கேற்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333041&reg=3&lang=1

***

AD/IR/PS/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333148) வருகையாளர் எண்ணிக்கை : 20