மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளுக்கான சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2026 3:34PM by PIB Chennai

பாலியல் வன்கொடுமை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்கான சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டத்தை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு, போக்சோ சட்டத்திற்கென பிரத்யேக நீதிமன்றங்கள் உள்பட, சிறப்பு விரைவு நீதிமன்றங்களுக்கான மத்திய நிதியுதவித் திட்டத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு, அதாவது, 01.04.2026 முதல் 31.03.2031 நிதியாண்டு வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்திற்கு மொத்தம் ரூ.3,788.04 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.2,353.15 கோடியும், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பங்களிப்பாக ரூ 1,434.89 கோடியும் அடங்கும். மத்திய அரசின் பங்குத் தொகை நிர்பயா நிதியிலிருந்து வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட இத்திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு, அதாவது 01.04.2026 முதல் 31.03.2031 வரை நீட்டிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், போக்சோ சட்டத்திற்கென பிரத்யேக நீதிமன்றங்கள் உட்பட, மொத்தம் 850 விரைவு சிறப்பு நீதிமன்றங்களை பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் செயல்பாட்டிற்குக் கொண்டுவர வகை செய்யப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்கும் வகையில், ஒவ்வொரு நீதிமன்றத்திலும் ஒரு நீதித்துறை அதிகாரி, ஒரு சிறப்பு அரசு வழக்கறிஞர் மற்றும் 6 பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.

மத்திய நிதியுதவித் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டு முறையின்படி, விரைவு சிறப்பு நீதிமன்றங்களின் செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332483&reg=3&lang=1&_gl=1

***

AD/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333043) வருகையாளர் எண்ணிக்கை : 6