இடுகை இடப்பட்ட நாள்:
02 NOV 2026 11:16AM by PIB Chennai
வளர்ச்சியடைந்த இந்தியா – கிராமப்புற வேலைவாய்ப்பு, வாழ்வாதார உத்தரவாதத் திட்டம் (விபி-ஜி ராம் ஜி சட்டம்) தொடர்பான குறைகளைகளுக்குத் தீர்வு காண்பதற்கான விதிமுறைகள் 2026-ஐ மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்துவதில் ஏற்படும் குறைகளுக்கு தீர்வுகாண்பதற்காக காலக்கெடு கொண்ட, பல்வேறு அடுக்குகளுடனான கட்டமைப்பை இந்த விதிமுறைகள் உருவாக்கியுள்ளன. குறைகளுக்கு தீர்வுகாண்பதை மேலும் அணுகக்கூடிய வகையிலும், வெளிப்படையானதாகவும், மக்களின் குறைகளுக்கு உரிய நேரத்தில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யவும் இந்த விதிமுறைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த விதிமுறைகளின்படி, மாநில அரசுகள், கிராமப் பஞ்சாயத்து, வட்டார, மாவட்ட அளவிலான, காலக்கெடுவிற்கு உட்பட்ட பல அடுக்குகள் கொண்ட குறைதீர்ப்பு தீர்வு முறையை ஏற்படுத்த வேண்டும். அந்தந்த நிலைகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள குறைதீர்ப்பு அதிகாரிகள் குறைகளை கேட்டறிதல், பதிவு செய்தல், விசாரணை நடத்துதல், தீர்வுகாணுதல் ஆகியவற்றிற்கு பொறுப்பாவார்கள்.
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மாவட்ட அளவில் குறைகளுக்குத் தீர்வுகாணும் முறையை கண்காணிப்பார். அத்துடன் அனைத்து குறைகளையும் இதற்கென வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பு, குறைகளுக்கு தீர்வுகாண்பதற்கான பொது உள்கட்டமைப்பு மூலம் தீர்வுகாணப்படுவதை உறுதிசெய்வார்.
குறைகளை எளிதாக அளிக்கும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஏற்படக்கூடிய சிக்கல்கள் குறித்து எந்தவொரு நபரும் புகார் அளிக்க முடியும். இதற்கென பல்வேறு வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நியமிக்கப்பட்ட குறைதீர்ப்பு அதிகாரியிடம் நேரில் விசாரணை மேற்கொள்ளுதல், விநியோக ஆதாரத்துடன் விரைவுத் தபால் மூலம் அனுப்புதல், மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு மூலம் சமர்ப்பித்தல், தொலைபேசி, சிறப்பு உதவி எண்கள் அல்லது மாநில அரசின் இதர வழிமுறைகள் வாயிலாக சமர்ப்பித்தல் ஆகியவை வழிமுறைகளாக கூறப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2331390®=48&lang=1
***
SS/IR/LDN/GS