வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா, பெல்ஜியம், லக்செம்பெர்க் நாடுகளிடையே பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்த கருத்தரங்கு

இடுகை இடப்பட்ட நாள்: 30 OCT 2026 12:45PM by PIB Chennai

இந்தியா- பெல்ஜியம்- லக்செம்பெர்க் பொருளாதார ஒன்றியத்தின் கூட்டு பொருளாதார ஆணையத்தின் 19-வது அமர்வு, 2026 அக்டோபர் 29-ம் தேதியன்று, லக்செம்பெர்க்கில் நடைபெற்றது. இதில், மூன்று நாடுகள் இடையேயான வர்த்தகம், முதலீடு, பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், இந்திய வர்த்தகத்துறை செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், பெல்ஜியம், லக்செம்பெர்க் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நவீனத் தொழிநுட்பம், நிதிச் சேவை, டிஜிட்டல் தொழிநுட்பம், தகவல் மற்றும் தொலைதொடர்பு, சுகாதாரம், உயிரி அறிவியல், ஆயுர்வேதம், பாரம்பரிய மருந்துகள், உணவு, வேளாண்மை  உள்ளிட்ட துறைகளில் இந்தியா, பெல்ஜியம், லக்செம்பெர்க் ஆகிய நாடுகள் இணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. விண்வெளி, ஆராய்ச்சி, புத்தாக்கம், உயர்கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவது, வர்த்தகம் தொடர்பான சந்தைகளை மேம்படுத்துவது, பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக மூன்று நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்தும் இந்த அமர்வில் விவாதிக்கப்பட்டது.

மேலும், இந்திய வர்த்தகத்துறை செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், லக்செம்பெர்க் நாட்டில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவரும் இந்தியாவில் முதலீடு செய்ய அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதற்கான சாத்தியகூறுகளையும் திரு ராஜேஷ் அகர்வால் எடுத்துரைத்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330346&reg=48&lang=1&_gl=1

***

SS/LN/SH 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2330583) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Telugu