உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அர்னாப் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்குத் தேவையான உதவிகள் அளிக்கப்படும் – மத்திய அமைச்சர் திரு அமித் ஷா

இடுகை இடப்பட்ட நாள்: 29 OCT 2026 11:36AM by PIB Chennai

அர்னாப் புயல் பாதிப்பு குறித்து ஆந்திரப்பிரதேசம், புதுச்சேரி, ஒடிசா, சட்டீஸ்கர் மாநிலங்களின் முதலமைச்சர்களிடம் மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா கேட்டறிந்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திரு அமித் ஷா, அர்னாப் புயல் பாதிப்பு குறித்து ஆந்திரப்பிரதேசம், புதுச்சேரி, ஒடிசா, சட்டீஸ்கர் மாநிலங்களின் முதலமைச்சர்களிடம் கேட்டறிந்து இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்ததாகக் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவை மீட்பு, நிவாரணப் பணிகளில் போர்கால அடிப்படையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். புயலின் தாக்கம் குறித்தும், தேவைப்படும் உதவிகள் குறித்தும் மதிப்பீடு செய்ய அமைச்சகங்களுக்கிடையேயான மத்திய குழு விரைவில் அனுப்பப்படும் என்று கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329879&reg=3&lang=1

***

SS/IR/GS/PS 


(வெளியீட்டு அடையாள எண்: 2330013) வருகையாளர் எண்ணிக்கை : 12