பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா - கனடா நாடுகளிடையே உத்திசார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அந்நாட்டுப் பிரதமர் திரு மார்க் கார்னியுடன் பிரதமர் ஆக்கபூர்வமான ஆலோசனை நடத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 13 OCT 2026 10:10PM by PIB Chennai

இந்தியா - கனடா நாடுகளிடையே, உத்திசார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, அந்நாட்டுப் பிரதமர் திரு மார்க் கார்னியுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நடத்திய ஆலோசனை ஆக்கபூர்வமானதாக இருந்தது.

இரு நாடுகளிடையேயான உறவுகளில் ஏற்பட்டுள்ள நேர்மறையான உத்வேகத்தை மேலும் வலுப்படுத்துவது என்றும், வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு, மக்கள் தொடர்பு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்தத் துறைகளில், உறுதியான முடிவுகளை மேற்கொள்ளும் வகையில்  பணியாற்றுவது என்றும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இந்தியா-கனடா நாடுகள் இணைந்து, நிலையான, வளமான உலகிற்கு  பங்களித்து வருகின்றன என்று பிரதமர் கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், கூறியிருப்பதாவது:

“பிரதமர் மார்க் கார்னியுடன் சுமுகமான, பயனுள்ள விவாதத்தை மேற்கொண்டேன்.

இந்தியா-கனடா உறவுகளில் ஏற்பட்டுள்ள நேர்மறையான உத்வேகத்தை மேலும் வலுப்படுத்தவும், வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு, மக்கள் தொடர்பு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்தத் துறைகளில் உத்திசார் ஒத்துழைப்பு மற்றும் உறுதியான முடிவுகளை மேற்கொள்ளும் வகையில் பணியாற்றவும் நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

இந்தியா-கனடா நாடுகள் இணைந்து, நிலையான, வளமான உலகிற்குப் பங்களித்து வருகின்றன.”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323025&reg=3&lang=1

***

(Release ID: 2323025)

SS/SV/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2328867) வருகையாளர் எண்ணிக்கை : 22