உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, நாட்டில் ஒரு ஆற்றல்மிக்க பாதுகாப்புக் கட்டமைப்பை நிறுவும் பணிகள் தொடங்கப்படுகின்றன

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2026 3:12PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இந்திய ராணுவத்துடன் முதல்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு கூட்டுப் பயிற்சியின் மூலம், இந்தியா ஒரு வலுவான பாதுகாப்பு அமைப்பைக் கட்டமைக்க உள்ளது. இதன் முதல் கட்டமாக, 12 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் குடிமைப் பாதுகாப்பு முதன்மைப் பயிற்றுநர்களுக்கான மூன்று நாள் சிறப்புப் பயிற்சி நடத்தப்பட உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தீயணைப்பு சேவைகள், குடிமைப் பாதுகாப்பு, ஊர்க்காவல் படை தலைமை இயக்குநரகம் ஆகியவை ராணுவத்துடன் இணைந்து, பாதுகாப்பு முதன்மைப் பயிற்றுநர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கவுள்ளன. இதன் மூலம் குடிமைப் பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்தும் ஒரு முன்னோடித் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக, பங்கேற்கும் ஒவ்வொரு மாநிலம் / யூனியன் பிரதேசத்திலிருந்தும் தலா 50 பேர் வீதம், மொத்தம் 600 குடிமைப் பாதுகாப்பு முதன்மைப் பயிற்றுநர்களுக்கு, ராணுவத்தின் பயிற்சி மையங்களில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சித் திட்டம் நடத்தப்படும்.

இதில் பங்கேற்கும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள்: ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், தில்லி, மேகாலயா, சிக்கிம், அசாம், உத்தரப் பிரதேசம், கேரளம், கர்நாடகா, தமிழ்நாடு.

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327332&reg=3&lang=1  

***

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2327566) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Malayalam