பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பந்திக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2026 6:40PM by PIB Chennai
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் உயரம் தாண்டுதல் டி64 பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள பந்திக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.10.2026) மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அவர் மிகுந்த நம்பிக்கையையும் உறுதியையும் வெளிப்படுத்தியிருப்பதைக் குறிப்பிட்டுள்ள திரு நரேந்தர மோடி, இந்த வெற்றி, இது வரும் ஆண்டுகளில் இன்னும் அதிக உயரங்களை இலக்காகக் கொண்டு மேலும் சாதிக்க அவருக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
"2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் உயரம் தாண்டுதல் டி64 பிரிவில் பந்தி வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் சிறந்த திறமையையும் உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த வெற்றி, வரும் ஆண்டுகளில் இன்னும் உயர்ந்த இலக்குகளைக் கொண்டு மேலும் சாதிக்க அவருக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்கட்டும்: பிரதமர் நரேந்திர மோடி"
(Release ID : 2326100)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2326233)
வருகையாளர் எண்ணிக்கை : 5