பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுகளில் வெண்கலப் பதக்கம் வென்ற பேபி சஹானா ரவிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 OCT 2026 7:44PM by PIB Chennai

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான ஒற்றையர் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பேபி சஹானா ரவிக்குப்  பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தன்னுடைய முதல் போட்டியிலேயே, 'ஸ்டாண்டிங்' பிரிவில் இந்தியாவுக்காக முதன்முதலாகப் பதக்கம் வென்று அவர் வரலாறு படைத்துள்ளதைக் குறிப்பிட்ட திரு மோடி, மிகுந்த பெருமைக்குரிய இந்தத் தருணம், இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று கூறினார். மேலும், அவரது எதிர்கால முயற்சிகளுக்குத் தனது நல்வாழ்த்துகளையும் பிரதமர் தெரிவித்துக் கொண்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், பேபி சஹானா ரவி, 'ஸ்டாண்டிங்' பிரிவில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்! தனது முதல் போட்டியிலேயே அவர் வென்றுள்ள இந்த வெண்கலப் பதக்கம் மிகவும் போற்றத்தக்கது. இது மிகுந்த பெருமைக்குரிய தருணம். இது பல இளம் விளையாட்டு வீரர்களை நிச்சயம் பெரிய கனவுகளைக் காண ஊக்குவிக்கும். அவருக்கு எனது வாழ்த்துகள். எதிர்கால முயற்சிகளிலும் அவர் சிறக்கட்டும்: பிரதமர் @narendramodi"

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325517&reg=48&lang=2

***

AD/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325950) வருகையாளர் எண்ணிக்கை : 13