பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆயுஷ் வர்மாவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
20 OCT 2026 7:20PM by PIB Chennai
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் ஈட்டி எறிதல் எஃப் 53/54 பிரிவில் சிறந்த சாதனையைப் படைத்து வெண்கலப் பதக்கம் வென்ற ஆயுஷ் வர்மாவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (20.10.2026) வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அந்த வீரருக்கு இது ஒரு மறக்க முடியாத அறிமுகம் என்பதைக் குறிப்பிட்டுள்ள திரு நரேந்திர மோடி, ஆயுஷ் இந்த வெற்றியைத் தன்வசப்படுத்தி, விளையாட்டுத் துறையில் தொடர்ந்து முத்திரை பதிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளதோடு, அவருக்குத் தமது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஆயுஷ் வர்மாவுக்கு ஒரு மறக்க முடியாத அறிமுகப் போட்டி! ஆடவர் ஈட்டி எறிதல் எஃப் 53/54 பிரிவில் தனது தனிப்பட்ட சிறந்த சாதனையைப் பதிவுசெய்து வெண்கலம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். இந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டு, அவர் தொடர்ந்து விளையாட்டுத் துறையில் தமது முத்திரையைப் பதிக்கட்டும். எனது நல்வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi"
****
(Release ID : 2325504)
AD/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2325572)
வருகையாளர் எண்ணிக்கை : 8