பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்த மோனா அகர்வாலுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 19 OCT 2026 1:14PM by PIB Chennai

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்ஹெச்1 பிரிவில் தங்கம் வென்ற மோனா அகர்வாலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சிறப்பான புள்ளிகளுடன், அவர் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் புதிய சாதனையைப் படைத்துள்ளதால், இந்த போட்டியில் இந்தியாவின் தொடக்கம் மேலும் சிறப்பு வாய்ந்ததாகியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அவரது துல்லியம், உறுதி, நிதானம் ஆகியவற்றைப் பாராட்டியுள்ள பிரதமர், அடுத்து வரும் போட்டிகளிலும் அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்ஹெச் 1 பிரிவில் தங்கம் வென்ற மோனா அகர்வாலுக்கு வாழ்த்துகள்! சிறப்பான புள்ளிகள் மூலம், அவர் ஒரு புதிய ஆசிய பாரா விளையாட்டு சாதனையையும் படைத்துள்ளார்! இது இப்போட்டியில் இந்தியாவின் தொடக்கத்தை மேலும் சிறப்பாக்கும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். அவரது துல்லியம், உறுதி, நிதானம் ஆகியவை உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. அடுத்து வரவிருக்கும் போட்டிகளிலும் அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் : பிரதமர் நரேந்திரமோடி"

****

(Release ID: 2325040)

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325148) வருகையாளர் எண்ணிக்கை : 7