சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேயிலையில் அறிவியல் அடிப்படையிலான பூச்சிக்கொல்லி வரம்புகளை எஃப்எஸ்எஸ்ஏஐ முன்மொழிந்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
17 OCT 2026 3:26PM by PIB Chennai
இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையமான எஃப்எஸ்எஸ்ஏஐ, அறிவியல் அடிப்படையிலான உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறையையும் நுகர்வோர் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கான தனது தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, தேயிலையில் அசெட்டமிப்ரிட், இமிடாக்ளோப்ரிட் ஆகிய இரண்டு பூச்சிக்கொல்லிகளுக்கான அதிகபட்ச வரம்புகளை (MRLs) முன்மொழிந்து, வரைவுத் திருத்தங்களை அறிவித்துள்ளது. இந்த முன்மொழிவானது, அறிவியல் மதிப்பீடுகள், தொடர்புடைய சர்வதேச நடைமுறைகள், இந்திய விவசாயத்தின் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பூச்சிக்கொல்லி தரநிலைகளை மறுஆய்வு செய்யும் அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது.
2026 அக்டோபர் 16 அன்று அரசிதழில் இந்த தரநிலைகள் வெளியிடப்பட்டன.
இந்த முன்மொழிவானது, பூச்சிக்கொல்லி எச்சத் தரநிலைகளை மதிப்பாய்வு செய்வதற்கும் திருத்துவதற்கும் எஃப்எஸ்எஸ்ஏஐ-ன் பரந்த ஒழுங்குமுறை அணுகுமுறையின் ஒரு பகுதியாக அமைகிறது.
அதிகபட்ச எச்ச வரம்புகள் உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறையின் ஒரு முக்கிய அங்கமாகும். அவை உணவுப் பொருட்களில் பூச்சிக்கொல்லி எச்சங்களின் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவைக் குறிப்பிடுகின்றன.
முன்மொழியப்பட்ட தரநிலைகள், வேளாண் உற்பத்தியில் திறமையான பூச்சி மேலாண்மையின் முக்கியத்துவத்தையும் அங்கீகரிக்கின்றன. பூச்சிக்கொல்லிகள், முறையாகவும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்படியும் பயன்படுத்தப்படும்போது, விவசாயிகள் பயிர்களைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும், பயிர் இழப்புகளைக் குறைக்கவும், வேளாண் உற்பத்தித்திறனைப் பராமரிக்கவும் உதவுகின்றன.
இந்த வரைவுத் திருத்தம் தொடர்பான அதிகாரப்பூர்வ அரசிதழ் அறிவிப்பை இந்த இணையதள இணைப்பில் காணலாம்: https://egazette.gov.in/(S(i0tkolhyj5o3synuv0wkdfgn))/ViewPDF.aspx
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324656®=3&lang=1
(Release ID : 2324656)
****
SK/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324714)
வருகையாளர் எண்ணிக்கை : 12