இடுகை இடப்பட்ட நாள்:
20 JUN 2026 8:44PM by PIB Chennai
ஒடிசா மாநிலம் பஹத்பூர் கிராமத்தில் உள்ள பள்ளியைப் பார்வையிட்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கல்விக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும், உள்ளூர் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உறுதி செய்வதிலும், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு முன்னின்று செயல்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், கூறியிருப்பதாவது:
“ஒடிசா மாநிலம் பஹத்பூர் கிராமத்தில் உள்ள பள்ளியைப் பார்வையிட்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இங்கு, கல்விக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும், உள்ளூர் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உறுதி செய்வதிலும், குடியரசுத் தலைவர் முன்னின்று செயல்பட்டு வருகிறார்.”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275847®=48&lang=2
***
TV/SV/ RJ