தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக அளவில் போட்டியிடக்கூடிய ஊடக, பொழுதுபோக்கு நிறுவனங்கள் இந்தியாவில் உருவாக வேண்டும்: தகவல் ஒலிபரப்புத் துறைச் செயலாளர்

இடுகை இடப்பட்ட நாள்: 15 OCT 2026 4:16PM by PIB Chennai

ஊடக மற்றும் பொழுதுபோக்குத் துறை நிறுவனங்கள் வெறும் அளவீடுகளைத் தாண்டி, தனித்துவமான அறிவுசார் சொத்துக்கள், நிலையான வணிக மாதிரிகள், உலகளாவிய சந்தை விரிவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சல் குமார் வலியுறுத்தினார். இந்தியாவை ஆக்கபூர்வமான உள்ளடக்கம், தொழில்நுட்பம், திறமை, உலகளவில் போட்டியிடக்கூடிய ஊடக நிறுவனங்களுக்கான முதன்மை மையமாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.

 

“ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் புதிய பொருளாதாரம்: இந்தியாவின் எதிர்கால உலகளாவிய ஊடக நிறுவனங்களை கட்டமைத்தல்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற, இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் ‘பிக் பிக்சர்’ உச்சிமாநாடு 2026 என்ற இரண்டு நாள் நிகழ்வின் தொடக்க அமர்வில் உரையாற்றிய திரு சஞ்சல் குமார், இந்தியாவின் வளமான கதை சொல்லும் மரபுகள், கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் படைப்பாற்றல் மிக்க திறமைகளை நீடித்த பொருளாதார மற்றும் கலாச்சார மதிப்பாக மாற்ற இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்டார்.

 

இந்தியாவின் படைப்பாற்றல் சூழல் அமைப்பை வலுப்படுத்துவதில் மத்திய அரசின் முயற்சிகளை எடுத்துரைத்த திரு. சஞ்சல் குமார், ,வேல்ஸ், வேவ்ஸ் பஜார்,  இந்திய படைப்பாற்றல் தொழில்நுட்ப நிறுவனம் (IICT) மற்றும் இந்தியா சினி ஹப் (India Cine Hub) போன்ற முன்னெடுப்புகளைக் குறிப்பிட்டு, உலக அளவில் போட்டியிடும் வகையில் இந்திய தயாரிப்புகள் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2323867&reg=3&lang=1

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324117) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Kannada , Malayalam