பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அனைத்து நாடுகளும் தங்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – பாதுகாப்பு அமைச்சர்

இடுகை இடப்பட்ட நாள்: 14 OCT 2026 11:44AM by PIB Chennai

அனைத்து நாடுகளும் தங்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்கான அம்சங்களை தாங்களே தேர்வு செய்து அமைதியான முறையில் வளர்ச்சியைத் தொடரக்கூடியதாக இந்தோ-பசிபிக் பிராந்தியம் திகழ வேண்டும் என்று இந்தியா விரும்புவதாகப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அவர் 2026 அக்டோபர் 14 அன்று, புதுதில்லியில் உள்ள மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வு மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு – இந்திய பாதுகாப்பு உத்திசார் குழுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

அமைதி, ஸ்திரத்தன்மை, செழுமை, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவும் ஆசியன் அமைப்பும் தெளிவான அக்கறைக் கொண்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார். இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை, சாகர் (பிராந்தியத்தில் அனைவருக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) மகாசாகர் (பிராந்தியங்களில் பாதுகாப்பு, வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் ஒட்டுமொத்த மேம்பாடு) ஆகியவற்றின் தொலைநோக்குப் பார்வையும் வெளிப்படையான, பல்வகை ஒத்துழைப்பை ஆதரிப்பதாக அவர் தெரிவித்தார். இந்தோ – பசிபிக் தொலைநோக்குப் பார்வைகேற்ப ஆசியன் அமைப்பு தலைமையிலான நடைமுறைகள் மூலம் நாடு அவற்றை ஒருங்கிணைப்பதாக அவர் கூறினார். அதிகரித்து வரும் உக்திசார்ந்த போட்டி, கடலில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் போது ஏற்படும் அழுத்தம், நிச்சயமற்ற தன்மை, தீவிரவாதம், இணைவழி குற்றம், கடற்கொள்ளை, கடத்தல், சட்டவிரோத மீன்பிடித்தல், பருவநிலை தொடர்பான பேரிடர்கள், முக்கிய விநியோகங்களில் ஏற்படும் அபாயங்கள் ஆகிய அச்சுறுத்தல்களால் இப்பிராந்தியத்தில் விரைவான மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார். இதுபோன்ற சவால்களில் எந்தவொரு நாடும் தனியாக எதிர்கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.

கருத்து வேறுபாடுகள் தகராறுகளாக மாறுவதற்கு முன்பாக அது குறித்து தொடக்கத்திலேயே விவாதிக்க வேண்டியதன் அவசியம் குறித்து திரு ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323085&reg=3&lang=1

***

TV/IR/SM/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2323143) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Gujarati