பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் 15 மாவட்டங்களை உள்ளடக்கிய ரயில்வேயின் இரண்டு பல்வழித்தட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 18 APR 2026 3:17PM by PIB Chennai

உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் 15 மாவட்டங்களை உள்ளடக்கிய ரயில்வேயின் இரண்டு பல்வழித்தட திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், ரயில்வேயின் தற்போதைய கட்டமைப்பு சுமார் 601 கிலோ மீட்டர் அளவிற்கு விரிவுபடுத்தப்படும். ரூ.24,815 கோடி மதிப்பிலான இத்திட்டம் 2030-31-ம் நிதி ஆண்டிற்குள் நிறைவேற்றப்படும்.

அதன்படி, காசியாபாத்-சித்தாபூர் இடையே மூன்றாவது, நான்காவது வழித்தடம் 403 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.14,926 கோடி செலவில் அமைக்கப்படும்.

ராஜமுந்திரி-விசாகப்பட்டினம் இடையே மூன்றாவது, நான்காவது வழித்தடம் 198 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.9,889 கோடி செலவில் அமைக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253249&reg=48&lang=2

***

SS/IR/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2322950) வருகையாளர் எண்ணிக்கை : 11