உள்துறை அமைச்சகம்
புதுதில்லியில், முதலாவது பிம்ஸ்டெக் உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தை நடத்துவதில் இந்தியா பெருமை கொள்கிறது மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
இடுகை இடப்பட்ட நாள்:
12 OCT 2026 6:29PM by PIB Chennai
புது தில்லியில், அக்டோபர் 13-ம் தேதி நடைபெறும் முதலாவது பிம்ஸ்டெக் உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தை நடத்துவதில் இந்தியா பெருமை கொள்வதாக மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பு நாடுகளின் உள்துறை அமைச்சர்களை அன்புடன் வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதம், எல்லை தாண்டிய குற்றச் செயல்கள், போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதக் கருத்துப் பரவல், ஆள் கடத்தல், சட்டவிரோத நிதிப் பரிமாற்றம், இணையத்தள அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை எதிர்கொள்வதில், உறுப்பு நாடுகளின் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை இந்தக் வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம் எடுத்துக் காட்டுவதாக உள்ளது. உறுதியான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மூலம், பாதுகாப்பான, வலிமையான, மிகவும் உறுதியான பிம்ஸ்டெக் பிராந்தியத்தை உருவாக்குவதற்குத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று திரு அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322415®=3&lang=1
****
TV/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2322505)
வருகையாளர் எண்ணிக்கை : 11