தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் ஊடகவியலாளர்கள் அக்டோபர் 15-ம் தேதிக்குள் அங்கீகார அட்டையை பெறலாம்
57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2026-ல் ஊடகவியலாளர்கள் பங்கேற்பதற்கு அங்கீகார அட்டை பெறுவதற்கான கடைசி நாள் 2026 அக்டோபர் 15 ஆகும். இவ்விழா குறித்த செய்தி சேகரிக்கத் திட்டமிடும் ஊடகவியலாளர்கள், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அதிகாரப்பூர்வ பத்திரிகை தகவல் அலுவலகத்தில் அங்கீகார இணையதளம் மூலம் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த விழா, கோவாவின் பனாஜியில் 2026 நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும். இது இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து திரைப்படத் தயாரிப்பாளர்கள், சினிமா நிபுணர்கள், திரைப்பட ஆர்வலர்களை ஒன்றிணைக்கும்.
ஊடகவியலாளர்கள் அதிகாரப்பூர்வ அங்கீகார இணையதளம் மூலம் ஊடகப் பிரதிநிதிகளாகப் பதிவு செய்யலாம்:
பதிவு இணைப்பு: https://accreditation.pib.gov.in/eventregistration/login.aspx
விண்ணப்பதாரர்கள் அங்கீகார வழிகாட்டுதல்களைக் கவனமாகப் படித்து, தேவையான அனைத்து ஆவணங்களையும் தங்கள் விண்ணப்பங்களுடன் சமர்ப்பிப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322324®=3&lang=1
****
TV/IR/LDN/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2322467)
வருகையாளர் எண்ணிக்கை : 18