இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சியின் மூலம் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு
இடுகை இடப்பட்ட நாள்:
12 OCT 2026 12:25PM by PIB Chennai
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காக போதைப்பொருள் இல்லா இளைஞர்கள் இயக்கம் சார்பில் இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி மூலம் போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. 100 வாரங்கள் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கான, தொடக்க விழா 2026 அக்டோபர் 10-ம் தேதி நடைபெற்றது. இதில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், 5 சட்டமன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் 1,469 இடங்களில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 3.65 லட்சம் இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற நோக்கத்துடன் இளைஞர் நாடாளுமன்றம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்பட்டன.
இதன்மூலம், போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து இளைஞர்களுக்கு எடுத்துரைப்பதுடன், போதைப்பொருட்களை தடுப்பதற்காக பொதுமக்களின் பங்களிப்பு குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கையெழுத்து இயக்கம், ஓவியப்போட்டிகள், போதைப்பொருள் தடுப்புக் குறித்த விவாதம் ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்பாக, ஆன்மீக அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியற்றின் பங்களிப்புடன் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நாடு முழுவதும் 4,552 இடங்களில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322125®=48&lang=1
***
SS/LN/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2322379)
வருகையாளர் எண்ணிக்கை : 8