இடுகை இடப்பட்ட நாள்:
22 APR 2026 8:34PM by PIB Chennai
குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் கூறியுள்ளதாவது;
"குஜராத்தின் வல்சாத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஏற்பட்ட உயிர் இழப்பு வருத்தமளிக்கிறது. இந்தத் துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர் நரேந்திர மோடி"
***
(Release ID: 2254665)
TV/PKV/RJ