பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆதி சங்கராச்சாரியாருக்குப் பிரதமர் அஞ்சலி

இடுகை இடப்பட்ட நாள்: 21 APR 2026 1:09PM by PIB Chennai

இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீக மேதைகளில் ஒருவரான ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அத்வைத வேதாந்தத்தின் அவரது ஆழ்ந்த போதனைகள், சிந்தனைகள் மற்றும் தத்துவம் உலகெங்கிலும் எண்ணற்ற மக்களுக்குத் தொடர்ந்து வழிகாட்டி வருவதாக திரு மோடி குறிப்பிட்டார். மேலும், ஆன்மீக சிந்தனைக்குப் புத்துயிர் அளிக்கவும், நாடு முழுவதும் ஆன்மீக மையங்களை நிறுவவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் நீடித்த உத்வேகமாகத் திகழ்கின்றன. "அவரது ஞானம், நமது பாதையைத் தொடர்ந்து ஒளிரச் செய்து, உண்மை, கருணை மற்றும் கூட்டு நல்வாழ்வுக்கான நமது அர்ப்பணிப்பை வலுப்படுத்தட்டும்," என்று திரு. மோடி தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

“ஆதிசங்கராச்சாரிய ஜெயந்தி என்னும் புனித நன்னாளில், இந்தியாவின் மாபெரும் ஆன்மீக ஒளிவிளக்குகளில் ஒருவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவருடைய ஆழ்ந்த போதனைகளும், சிந்தனைகளும், அத்வைத வேதாந்தத் தத்துவமும் உலகெங்கிலும் எண்ணற்ற மக்களுக்குத் தொடர்ந்து வழிகாட்டி வருகின்றன. நல்லிணக்கம், ஒழுக்கம் மற்றும் அனைத்து இருப்புகளின் ஒருமைப்பாடு ஆகியவற்றை அவர் வலியுறுத்தினார். ஆன்மீகச் சிந்தனைக்குப் புத்துயிர் அளிக்கவும், நாடு முழுவதும் ஆன்மீக மையங்களை நிறுவவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் நீடித்த உத்வேகமாகத் திகழ்கின்றன. அவருடைய ஞானம், நமது பாதையைத் தொடர்ந்து ஒளிரச் செய்து, உண்மை, கருணை மற்றும் கூட்டு நல்வாழ்வுக்கான நமது அர்ப்பணிப்பை வலுப்படுத்தட்டும்.”

***

(Release ID: 2254074)

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2321412) வருகையாளர் எண்ணிக்கை : 10