நிதி அமைச்சகம்
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் சிங்கப்பூர் பயணம்
இடுகை இடப்பட்ட நாள்:
09 OCT 2026 7:46AM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இன்று முதல் (2026 அக்டோபர் 9) வரும் 11-ம் தேதி வரை சிங்கப்பூருக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் போது, அவர், சிங்கப்பூரைச் சேர்ந்த தலைவர்கள், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோருன் உயர்மட்ட ஆலோசனைகளை நடத்தவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது திருமதி நிர்மலா சீதாராமன், சிங்கப்பூர் அதிபர் திரு தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூர் பிரதமர் திரு லாரன்ஸ் வோங், சிங்கப்பூர் துணைப் பிரதமர் திரு கான் கிம் யோங், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரைச் சந்திக்கிறார்.
இந்தக் கலந்துரையாடல்கள், இந்தியா-சிங்கப்பூர் விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் நிதி சேவைகள், மூலதனச் சந்தைகள், வரிவிதிப்பு, குறைக்கடத்திகள், மேம்பட்ட உற்பத்தி, திறன் மேம்பாடு, விமானப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கும்.
சிங்கப்பூரில் உள்ள முதலீட்டாளர்களுடனான தமது சந்திப்புகளின் ஒரு பகுதியாக, மத்திய நிதியமைச்சர், ஒரு வட்டமேசை மாநாட்டில் பங்கேற்கிறார். முன்னணி சர்வதேச முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள், வணிகத் தலைவர்கள் ஆகியோருடன் அவர் கலந்துரையாடுகிறார் . இந்தக் கலந்துரையாடல், இந்தியாவின் வளர்ச்சிப்பாதை, முதலீட்டு வாய்ப்புகள், மாறிவரும் உலகப் பொருளாதார, நிதிச் சூழல் குறித்து முன்னணி உலகளாவிய முதலீட்டாளர்களுடன் கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு வாய்ப்பை வழங்கும்.
மேலும் இவர்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321121®=3
***
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2321405)
வருகையாளர் எண்ணிக்கை : 8