பிரதமர் அலுவலகம்
அரசின் தலைமைப் பொறுப்பிலிருந்து நாட்டிற்கு 25 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளதையொட்டி போட்ஸ்வானா அதிபர் திரு டுமா போகோவின் வாழ்த்துகளுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2026 9:06PM by PIB Chennai
போட்ஸ்வானா நாட்டுடனான நட்புறவின் மீது இந்தியா நன்மதிப்பு கொண்டுள்ளது என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான நெருங்கிய உறவை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து, சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது:
அதிபர் டுமா போகோ அவர்களே, உங்கள் அன்பான வாழ்த்துகளை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.
போட்ஸ்வானா நாட்டுடனான நட்புறவை இந்தியா மிகவும் மதிக்கிறது; நமது நெருங்கிய உறவை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் உள்ளேன்.
***
(Release ID: 2320423)
TV/BR/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2320875)
வருகையாளர் எண்ணிக்கை : 4