பிரதமர் அலுவலகம்
வளர்ச்சியடைந்த இந்தியாவை வடிவமைத்து வளரும் நாடுகளுக்கு உத்வேகம் அளிக்கும் தலைமைத்துவம், சேவை ஆகியவற்றை எடுத்துரைக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2026 12:23PM by PIB Chennai
பிரதமரின் தலைமைத்துவம் ஞானம், இரக்கம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பது குறித்து பூட்டான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கே எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
வளர்ச்சியடைந்த இந்தியா இந்த மாண்புகளில் தெளிவான வெளிப்பாடாக உள்ளது என்றும், அது இந்தியாவிற்கு பொதுவாக தொலைநோக்குப் பார்வையை அளித்து அதை கட்டமைக்க மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்றும் திரு டோப்கே சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் வலிமைமிக்க இந்தியா தமது அண்டை நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் மேலும் அதிகளவில் உதவமுடியும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
"பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவம் ஞானம், இரக்கம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பது குறித்து பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே எழுதியுள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா இந்த மாண்புகளில் தெளிவான வெளிப்பாடாக உள்ளது என்றும், அது இந்தியாவிற்கு பொதுவாக தொலைநோக்குப் பார்வையை அளித்து அதை கட்டமைக்க மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்பதாகவும் அவர் காண்கிறார்.
வலிமைமிக்க இந்தியா தமது அண்டை நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் மேலும் அதிகளவில் உதவமுடியும் என்று அவர் கூறுகிறார். இது தலைமைத்துவம், சேவை ஆகியவற்றில் ஒரு சிந்தனைமிக்க பிரதிபலிப்பாகும்."
***
(Release ID: 2319966)
TV/IR/SM/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2320125)
வருகையாளர் எண்ணிக்கை : 4