சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இ-சஞ்சீவினி திட்டத்தின் கீழ் தொலைதூர மருத்துவ ஆலோசனையின் எண்ணிக்கை 50 கோடியை கடந்து சாதனை

இடுகை இடப்பட்ட நாள்: 06 OCT 2026 9:53AM by PIB Chennai

ஊரடங்கு, நோய்த்தொற்று காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக மருத்துவ ஆலோசனை பெறும் இ- சஞ்சீவினி திட்டத்தை மத்திய சுகாதார, குடும்பநல அமைச்சகம் செயல்படுத்தியது. இ-சஞ்சீவினி இணையதளத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்து, ஆன்லைன் மூலமாக மருத்துவரிடம் தங்களது நோய் குறித்து ஆலோசனை பெற்று, அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மருத்துக்கடைகளில் வாங்கி பயன்பெறலாம். குக்கிராமங்களில் வசிப்போர், மருத்துவமனைகளுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டிய சூழல் உள்ளவர்கள் பயனடையும் வகையில், இத்திட்டம் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இ-சஞ்சீவினி திட்டத்தின் மூலம், 2026 செப்டம்பர் 15-ம் தேதி வரை நாடு முழுவதும் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை 50 கோடியை கடந்துள்ளது.    

இ-சஞ்சீவினி திட்டத்தின் மூலம், பெண்கள் அதிகளவில் பயன்பெற்றுள்ளனர். 57.14 சதவீதம் பெண்கள் மருத்துவ ஆலோசனைகள் பெற்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 46 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் 40.15 சதவீதம் பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 16.25 சதவீதம் பேரும் இ- சஞ்சீவினி திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர். மிகுந்த வரவேற்பு பெற்றுள்ள இத்திட்டத்தை ஆரம்ப சுகாதார நிலையம் முதல் எய்ம்ஸ் மருத்துவமனைகள் வரை மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இ-சஞ்சீவின் திட்டத்தை மத்திய அரசு மேம்படுத்தி வருவது குறிப்பித்தக்கது.   

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319427&reg=3&lang=1

***

SS/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2319757) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Malayalam