தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சஞ்சார் சாத்தி இணையதளம் மூலம் ரூ.5000 கோடிக்கும் அதிக மதிப்பிலான சந்தேகத்திற்குரிய இணையவழி மோசடி இழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2026 2:27PM by PIB Chennai

நாடு முழுவதும் சஞ்சார் சாத்தி இணையதளத்தை (www.sancharsaathi.gov.in) அது தொடங்கப்பட்ட 2023 மே மாதத்திலிருந்து 30 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டுள்ளனர். தொலைத்தொடர்புத் தொடர்பான மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது.

தொலைத்தொடர்புத் துறையால் உருவாக்கப்பட்ட இந்த இணையதளம், கைப்பேசி பயனாளர் எளிதான முறையில் பயன்படுத்தக்கூடிய அம்சங்களை அளிக்கிறது. சந்தேகத்திற்குரிய அழைப்பு அல்லது குறுஞ்செய்தி குறித்து புகாரளிக்கவும் தங்களுடைய பெயரில் எத்தனை கைப்பேசி எண்கள் உள்ளன என்பதை அறியவும், தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட கைப்பேசியை முடக்கவும், கைப்பேசியை வாங்குவதற்கு முன்பாக அது உண்மையானதாக என்பதை சரிபார்க்கவும் அவை உதவுகின்றன.

தொலைத்தொடர்புத்துறை, வங்கிகள், சட்ட அமலாக்க முகமைகள் ஆகியவை மோசடி செய்பவர்கள் அடுத்த சட்டமீறலில் ஈடுபடுவதற்கு முன்பாக அவர்களைத் தடுக்க உதவுகிறது. இதுபோன்று சஞ்சார் சாத்தியை பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு குடிமகனும், சைபர் போராளியாகவும், இணையவழி மோசடிக்கு எதிரான கேடயமாகவும் செயல்படுகிறார்.

இந்த இணையதளம் மூலம் தொலைந்துபோன 14 லட்சத்திற்கும் அதிகமான கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன. ரூ.5000 கோடிக்கும் அதிக மதிப்பிலான சந்தேகத்திற்குரிய இணையவழி மோசடி இழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319087&reg=3&lang=1

***

TV/IR/LDN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2319183) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Telugu , Malayalam