தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மிசோரம் சாலை விபத்தில் நேரிட்ட தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சக அதிகாரிகளின் மறைவுக்கு அமைச்சகம் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
02 OCT 2026 6:58PM by PIB Chennai
2026 அக்டோபர் 1 அன்று மிசோரமில் நிகழ்ந்த மோசமான சாலை விபத்தில், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு அமைச்சகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளது. அரசுப் பணியின்போது, அதிகாரிகள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இம்பால் பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் டாக்டர் என்காம் பாமே, ஐஸ்வால் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியின் செய்திப் பிரிவு இயக்குநர் திரு நம்பிபோ மரின்மய், ஐஸ்வால் மத்திய தகவல் தொடர்பகத்தின் கள அலுவலகத்தைச் சேர்ந்த திரு ஹெச். லியான்வேலா ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
மூன்று சக ஊழியர்களின் துயரமான இழப்பு அமைச்சகத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் அகால மரணம், அவர்கள் சார்ந்த நிறுவனங்களுக்கும், நாடு முழுவதும் மக்கள் தொடர்பு மற்றும் தகவல் விநியோக பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், வல்லுநர்களின் பரந்த குடும்பத்திற்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2318302®=3&lang=1
***
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2318579)
வருகையாளர் எண்ணிக்கை : 13