உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஃப்சிஆர்ஏ பதிவுக்காக சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு அதிகாரிகள் கைது

இடுகை இடப்பட்ட நாள்: 29 SEP 2026 12:45PM by PIB Chennai

ஒரு சங்கத்தின் நிலுவையில் உள்ள வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் (எஃப்சிஆர்ஏ) கீழ் பதிவு நடைமுறைகளை நிறைவு செய்வதற்கு சட்ட விரோதமாக முறைகேட்டில் ஈடுபட்ட இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்துறை அமைச்சகத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் தில்லி காவல்துறை சிறப்பு பிரிவு மத்திய புலனாய்வு முகமைகளுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு பிரிவிலும் மற்றொருவர் ஊதியம், கணக்குகள் அலுவலகத்திலும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் சில சங்கங்களின் பதிவு, புதுப்பித்தல் போன்ற செயல்களில் அவ்விருவரும் ஈடுபட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து கூடுதல் விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

முறைகேடு தொடர்பான விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறது. இதனையடுத்து, இந்த முறைகேடு விவகாரம் தொடர்பாக சட்டப்பூர்வ, துறை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்கு முறை சட்டம் தொடர்பான அனைத்து சேவைகளும் அதற்கான இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே. எந்தவொரு இடைத்தரகர், முகவர் அல்லது தனிநபர்களுக்கு இது தொடர்பான சேவைகளை மேற்கொள்ள அங்கீகாரம் வழங்கப்படவில்லை என உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2316383&reg=3&lang=1

 

***

SS/SV/PS/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2316511) வருகையாளர் எண்ணிக்கை : 8