பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சர்வேஷ் குஷாரேவிற்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
27 SEP 2026 9:19PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் சர்வேஷ் குஷாரேவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிறப்பான முயற்சியின் மூலம் உயரம் தாண்டுதலில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் 50 ஆண்டு கால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். விடாமுயற்சி, மன உறுதி ஆகியவற்றுடன் இந்தச் சாதனையைப் படைத்துள்ளது மறக்க முடியாத தருணம் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதலில் சர்வேஷ் குஷாரே வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் வெள்ளிப்பதக்கம்! அவரது சிறப்பான முயற்சியின் மூலம் உயரம் தாண்டுதலில் பதக்கம் வெல்வதற்கான இந்தியாவின் 50 ஆண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. விடாமுயற்சி, மன உறுதி ஆகியவற்றால் நிகழ்ந்த அவரது இந்தச் சாதனை மறக்க முடியாததாக மாறியுள்ளது!”
***
Release ID: 2315673
TV/SV/PS/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2316428)
வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam