ஊரக வளர்ச்சி அமைச்சகம்
70,000 கிராமப்புற இளைஞர்களுக்கு அக்டோபர் முதல் திறன் மேம்பாட்டு பயிற்சித் தொடக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
25 SEP 2026 9:31AM by PIB Chennai
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் அக்டோபர் மாதம் முதல் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தீன் தயாள் உபாத்யாயா கிராமப்புறத் திறன் மேம்பாட்டுத் திட்டம் 2.0-ன் பயிற்சி வகுப்புகளைத் தொடங்க உள்ளது.
தீன் தயாள் உபாத்யாயா கிராமப்புறத் திறன் மேம்பாட்டுத் திட்டம் 2.0 இணையதளத்தில் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1,200-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கான, திட்ட அமலாக்க முகமையின் ஒதுக்கீடு 5.6 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 70,000 கிராமப்புற இளைஞர்கள் கொண்ட 2015 குழுக்கள் வரும் அக்டோபர் மாதம் முதல் தங்களது பயிற்சிகளை தொடங்க உள்ளன.
தீன் தயாள் உபாத்யாயா கிராமப்புறத் திறன் மேம்பாட்டுத் திட்டம் 2.0 திட்டமானது ஏழை கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சியை வழங்கும் மத்திய அரசின் நிதி உதவித் திட்டமாகும்.
இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு 3 முதல் 12 மாதங்கள் வரை பொது மற்றும் தனியார் துறை கூட்டாண்மை முறையில் தேசிய திறன் தகுதி கட்டமைப்புடன் இணைந்த படிப்புகளில், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2314665®=3&lang=1
***
SS/AC/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2315059)
வருகையாளர் எண்ணிக்கை : 18