உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் போதைப்பொருள் தடுப்புப் பணிக்குழு தலைவர்களுக்கான தேசிய மாநாட்டை மத்திய உள்துறை திரு அமித் ஷா தொடங்கி வைத்தார்

போதைப்பொருள்களுக்கு எதிரான போராட்டத்திற்கு முன்னுரிமை அளித்து, ஒன்றிணைந்து போராடி வெற்றி பெற வேண்டும்: திரு அமித் ஷா

இடுகை இடப்பட்ட நாள்: 22 SEP 2026 5:54PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று புது தில்லியில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் போதைப்பொருள் தடுப்புப் பணிக்குழு தலைவர்களுக்கான 3-வது தேசிய மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் தொலைக்காட்சி விளம்பரங்களை மத்திய உள்துறை அமைச்சர் வெளியிட்டார். மேலும், லக்னோ, டேராடூனில் ஆகிய இடங்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் புதிய மண்டல வளாகங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியின் போது, சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் போதைப்பொருள் தடுப்புப் பணிக்குழுக்கள் கௌரவிக்கப்பட்டன.  இந்த இரண்டு நாள் மாநாட்டில், 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த போதைப்பொருள் தடுப்புப் பணிக்குழுத் தலைவர்கள், சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

 

 

தமது உரையில், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற கடினமான இலக்கை அடைவதற்கான முயற்சியில் நாம் படிப்படியாக முன்னேறி வருகிறோம் என்று கூறினார்.

 

 போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கவும் , எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்றவும், இளைஞர்களை இந்தியாவின் வளர்ச்சியுடன் இணைக்கவும், இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவதுமே நமக்கு முன்னால் உள்ள இலக்கு என்று திரு அமித் ஷா கூறினார். இந்தப் பிரச்சினையை நாம் ஒன்றுபட்டும், பேரார்வத்துடனும் எதிர்த்துப் போராடி அதில் நாம் வெற்றி பெற வேண்டும் என்று திரு அமித் ஷா கூறினார்

 

மாநாட்டின் போது நடைபெறும் கலந்துரையாடல்கள், போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டங்களைத் திறம்பட அமல்படுத்துவதை வலுப்படுத்தவும், நாட்டின் இளைஞர்களைப் போதைப்பொருட்களிலிருந்து பாதுகாக்க வகுக்கப்பட்ட உத்திகளை மேலும் தாக்கமுள்ளதாக மாற்றவும் உதவும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2313570&reg=3&lang=1

(Release ID : 2313570)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2313641) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , Marathi , हिन्दी , Gujarati , Kannada , Malayalam