நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தவறான வழிகாட்டும் கோரிக்கைகள், போலியான வடிவமைப்பு ஆகியவற்றிற்காக ராபிடோ நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ 10 லட்சம் அபராதம்

இடுகை இடப்பட்ட நாள்: 15 SEP 2026 5:24PM by PIB Chennai

தவறான வழிகாட்டும் கோரிக்கைகள், போலியான வடிவமைப்பு ஆகியவற்றிற்காக ராபிடோ நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

தலைமை ஆணையர் திருமதி நிதி காரே, ஆணையர் திரு அனுபம் மிஸ்ரா ஆகியோர் தலைமையிலான மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்,  போக்குவரத்து சேவை வழங்கும் தனியார் நிறுவனம், (ராப்பிடோ இயங்குதளத்தை நிர்வகிக்கும் நிறுவனம்) மீது ரூ 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

தவறான விளம்பரங்கள், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், நியாயமற்ற ஒப்பந்த விதிமுறைகள், பயண முன்பதிவு உறுதி செய்யப்படுவதற்கு முன்பே கூடுதல் கட்டணம் செலுத்தத் தூண்டும் வகையிலான நுகர்வோரைத் தவறாக வழிநடத்தும் டிஜிட்டல் வடிவமைப்பு உத்திகள் ஆகியவற்றிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் செயல்படும் வாடகை வாகன சேவை மற்றும் இருசக்கர வாடகை வாகன சேவைக்கான ஒருங்கிணைப்பு தளங்களில், பயணம் தொடங்கும் முன் கூடுதல் ரொக்கம் வழங்குதல், தேவைக்கேற்ப மாறும் கட்டண முறை தொடர்பான நடைமுறைகளை ஆய்வு செய்ய மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கேகாணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310526&reg=3&lang=1   

***

TV/SV/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2311586) வருகையாளர் எண்ணிக்கை : 25
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Telugu , Kannada