நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்த மின்னணு வர்த்தக விதிகளை அரசு திருத்தியுள்ளது - 2027 ஜனவரி 1 முதல் புதிய விதிகள் அமல்

இடுகை இடப்பட்ட நாள்: 10 SEP 2026 5:14PM by PIB Chennai

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை, மின்னணு வர்த்தகத்தில் நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன், மின்னணு வர்த்தக விதிகள் - 2020-ஐ திருத்தியுள்ளது.

திருத்தப்பட்ட விதிகள் , மின்னணு வர்த்தக நிறுவனங்கள் மீது தேவையற்ற ஒழுங்குமுறைச் சுமைகளைச் சுமத்தாமல், வணிகம் செய்வதை எளிதாக்குவதுடன், நுகர்வோர் நலன்களையும் பாதுகாக்க முற்படுகின்றன.

திருத்தப்பட்ட விதிகளின் ஒரு முக்கிய அம்சம், ஒவ்வொரு மின்வணிக நிறுவனமும் தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் ஒருங்கிணைப்புச் செயல்பாட்டில் ஒரு பங்கேற்பாளராக ஆக வேண்டும் எனக் கோருகிறது. இது, மின்வணிகத் தளங்களை தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு அமைப்புடன் ஒருங்கிணைப்பதை வலுப்படுத்துகிறது.

முக்கிய திருத்தங்கள்:

நுகர்வோர் புகார்கள்: ஒவ்வொரு மின்வணிக நிறுவனமும், தனது குறைதீர்ப்பு அதிகாரியால் பதிவு செய்யப்பட்ட புகாரின் நகலை, புகார்தாரருக்கு வழங்க வேண்டும்.

தேடல் முடிவுகள்: மின்வணிக நிறுவனங்கள், பயனர்களைத் தவறாக வழிநடத்தும் வகையிலோ அல்லது பயனரின் தேடல் வினாவிற்கு முடிவுகளின் பொருத்தத்தைப் பாதகமாகப் பாதிக்கும் வகையிலோ தேடல் முடிவுகளைத் திரிக்கக் கூடாது.

விளம்பரப் பட்டியல்கள்: விளம்பரப் பட்டியல்கள், தெளிவான மற்றும் முக்கியமான அறிவிப்புகள் மூலம் அடையாளம் காட்டப்பட வேண்டும்.

விலைக் குறைப்புகள்: விலைக் குறைப்பு அறிவிக்கப்படும்போது, ​​குறைக்கப்பட்ட விலை, முந்தைய விலை ஆகிய இரண்டும் காண்பிக்கப்பட வேண்டும்.

விற்பனையாளர், தயாரிப்புத் தகவல் : சந்தை மின்வணிக நிறுவனங்கள், நுகர்வோர் தகவலறிந்து முடிவெடுப்பதை எளிதாக்கும் வகையில், காலாவதியாகும்/பயன்படுத்த வேண்டிய தேதிகள், திருப்பி அளித்தல்/பணம் திரும்பப் பெறுதல், உத்தரவாதம், விநியோகம், பணம் செலுத்துதல் விவரங்கள் உள்ளிட்ட முக்கியத் தகவல்களை வழங்க வேண்டும்.

நுகர்வோர் தகவல்: சந்தை மின்வணிக நிறுவனங்கள், நுகர்வோரின் வெளிப்படையான, திட்டவட்டமான ஒப்புதல் இல்லாமல், குறிப்பிட்ட நோக்கங்களுக்காக அவர்களின் தகவல்களைப் பயன்படுத்தக் கூடாது.

இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்: இறக்குமதியாளர் விவரங்கள், பொருள் உருவான நாடு ஆகியவை வெளியிடப்பட வேண்டும்.

இந்த விதிகள் மின்னணு வர்த்தகத் துறையில் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நுகர்வோரைப் பாதுகாப்பதற்கான கட்டமைப்பை வழங்குகின்றன.

திருத்தப்பட்ட விதிகள் 2027 ஜனவரி 01-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308759&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2310842) வருகையாளர் எண்ணிக்கை : 36
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam