நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

யுபிஐ பரிவர்த்தனைகளில், உயர் மதிப்பிலான வர்த்தக ரீதியில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு வணிகர்களுக்கான கட்டண விகிதம் பொருந்தும் - நிதியமைச்சகம் விளக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 15 SEP 2026 6:45PM by PIB Chennai

எந்தவிதக் கட்டணமும் விதிக்கப்படாத குறிப்பிட்ட மின்னணு கட்டண முறைகளை அறிவிக்க ஏதுவாக, அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், மத்திய அரசு பணப் பரிவர்த்தனைகள், தீர்வு அமைப்புகள் சட்டம், 2007-ல்  திருத்தம் செய்துள்ளது. இந்த சட்டத் திருத்தம், டிஜிட்டல் பரிவர்த்தனைகளில், குறைந்த கட்டணம், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கான சட்டப்பூர்வ அடித்தளத்தை வழங்குகிறது.

14 செப்டம்பர் 2026 அன்று, மத்திய அரசு இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, ரூ 2,000 வரையிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு 'வணிகர் தள்ளுபடி விகிதம்' ஏதும் விதிக்கப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், செயல்பாட்டு அளவுகோல், கட்டணப் பகிர்வு மாதிரிகள், வகை வாரியான வரம்புகள் குறித்து, யுபிஐ வழிகாட்டுதல் குழுவின் ஆலோசனைகளுக்குப் பிறகு, இந்திய தேசிய கட்டணக் கழகம், 15 செப்டம்பர் 2026 அன்று விரிவான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்தச் சுற்றறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

தனி நபர்களுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, பரிவர்த்தனை மதிப்பைச் சாராமல் எவ்விதக் கட்டணமும் இருக்காது. மொத்த யுபிஐ பரிவர்த்தனைகளில், எண்ணிக்கையின் அடிப்படையில் தனிநபர் பரிவர்த்தனைகள் 37% ஆகவும், மதிப்பின் அடிப்படையில் 70% ஆகவும் உள்ளன.

ரூ 2,000-க்கும் அதிக மதிப்புள்ள தனிநபர் - வணிகர் இடையேயான பணப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த கட்டணங்கள் பொருந்தும்.

ரூ 2,000-க்கும் மேற்பட்ட தனிநபர் - வணிகர் இடையேயான பணப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% என்ற பெயரளவு கட்டணம் விதிக்கப்படும்.

ரூ 75,000, அதற்கு மேற்பட்ட அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு, தலா ரூ 300 என உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும்.

ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் , விவசாய இடுபொருட்கள் போன்ற அத்தியாவசியமான துறைகளில் மேற்கொள்ளப்படும் ரூ 2,000-க்கும் மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தலா ரூ. 5 என்ற நிலையான கட்டணம் விதிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310586&reg=3&lang=1

(Release ID: 2310586)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2310635) வருகையாளர் எண்ணிக்கை : 29
இந்த வெளியீட்டை படிக்க: English , Khasi , Urdu , हिन्दी , Gujarati , Malayalam